தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம்

தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம் தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம் செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்பண்டைப்பெரும் புகழ் உடையாமோ? இல்லையா? பாருக்கு வீரத்தை சொன்னோமா இல்லையா! எண்டிசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா? எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? தமிழ் காப்போம் என்றோம், எழுந்தாரா இல்லையா? தமிழ்க்குயிர் தரஇசைந் தாரா இல்லையா? தமிழ்வாழ்ந் தால்தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா? செந்தமிழ் நெஞ்சம் கொதித்ததா இல்லையா? தில்லி நரிதான் நடுங்கிற்றா […]Read More

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு […]Read More