காலைக் கதிரவன் உன் விழித் திறக்கும் ஒளியினால்… இரவில் சந்திரன் உன் முகம் சிந்தும் வண்ணத்தினால்.. வானமும், பூமியும் வெற்றிடம் ஏதுமின்றி உன் மூச்சுக்காற்றால் நிறைய… நீளும் சாலையெங்கும் உன் நினைவுகளாய் விரிய… பின்தொடர்கிறேன் உன் நினைவலைகளை பற்றிய படி நான்.. ஆம் விண்ணும் நீ மண்ணும் நீ… உயிரும் நீ உணர்வும் நீ… எங்கு நோக்கினும் என் யாதுமாகி நின்றாயடிக் கண்மணி..!Read More
உன் மீதான என் காதலை சொல்ல தாய் மொழியிலும் கூட வார்த்தைகள் போதவில்லை… வார்த்தைகள் தேடிக் கிடைப்பினும் விவரித்துச் சொல்ல தைரியம் அது போதவில்லை… உன் கண்கள்.. ! உலகத்தையே உன் ஒற்றை பார்வை அது விழுங்கிவிடுமெனில்., நான் அதில் ஒரு துகள் அல்லவே..! என் காதல் அதை கையில் ஏந்தி காத்திருக்கிறேன்… உன் ஓரப் பார்வையேனும் என் மீது நிலைத்து நிற்காதா என்று… என்னோடு நீ வேண்டும் பல ஆண்டுகளாய் என் பிராத்தனையின் இறுதி வரி […]Read More
மும்முரமான அலுவல்களில் மூச்சு விடும் சில மணி துளிகளில் வந்து செல்லும் இதழோர புன்னகை… கூட்ட நெரிசல்களை கடந்த யாரும் அல்லா சாலையில் நானும் வாகனமும் வேகமெடுத்து இயங்கிக் கொண்டிருக்க இதயத்தை மட்டும் இயங்க விடாமல் இழுத்துப் பிடிக்கும் நினைவலைகளின் சங்கமம்… பெயர் தெரியா குழந்தையிடம் காட்டும் குறும்புத்தனம்… ஆயிரம் பேர் கொண்ட அவையில் நடுக்கமேதுமின்றி ஓங்கி ஒலிக்கும் என் குரலின் பின்னணி.. யார் நீ… ஆம் நானே நீ.. யாவும் நீ..Read More
புதிதாய் வாங்கிய பேனாவிற்கு அனிச்சையாய் மூளை இடும் முதல் கட்டளை… ! கடைக்காரரின் பிரத்தியேக பேனா பரிசோதிப்பு தாளில் பல கிறுக்கல்களுக்கு மத்தியில் பளிச்சிடும் ஒற்றை வரி கவிதை…Read More
தலை வாரி பூசூடி தாவணியில் நான் ஆடி கொடியிலும் முடியிலுமாக எத்தனைதான் இருக்கமடி… உனக்கு எத்தனைதான் தடங்கலடி.. தாடிகளும் கேடிகளும் நிறைந்த நாட்டில் தேடினாலும் குற்றமடி, ஓடினாலும் கொலைகளடி.. எத்தனைதான் இருக்கமடி என் பெண்ணே உனக்கு எத்தனைதான் தடங்கலடி.. தாவணி போட்ட தீபாவளி என்பார்கள் தாண்ட கூடாது படி என்பார்கள் அடுபடியே கதி என்பார்கள் அடிபடு அதுவே உன் விதி என்பார்கள் பாவை நீயும் பாவமடி பார்வை அவர்கள் கண்களிலே எத்தனைதான் இருக்கமடி..! உனக்கு எத்தனைதான் தடங்கலடி… […]Read More
எனதா …. இல்லை உனதா…என் கண்கள்..?! நீ இருக்கும் திசை நோக்கியே… பாய்கிறதே….!! துரோகத்திற்கு தண்டனையாய்…. என் இமைக் கொண்டு மூட நினைக்கையில்.. உன் பிம்பத்தை சிறை பிடித்து… என் இமையையே திரையாக்கி… அதில் பிரதிபலித்துக் காட்டுகின்றன… அவ்விரு பாவிகள்… போனால் போகட்டும் நானிருக்கிறேன் உனக்கு…. என என் இதயம் அழைக்கையில்… இதோ என் நிம்மதி என்று ஓடோடி போனேன்… ஆனால் துடிக்கும் போது மட்டும் அவளின் பெயரை உச்சரிப்பேன் பொறுத்துக்கொள் என்றது..அது… தஞ்சம் தேடி வந்தவனை […]Read More
கத்தி ஏந்திய கண்கள் இரண்டும்…. ஒரு பார்வையால் எனை சாய்த்திட… காதல் எனும் கை கொடுத்து எனை காத்திடுவாயோ..?! அல்ல… இதயம் திருட வந்த கள்வன் இவன்… என்றென்னி…. எட்டி மிதித்து கடந்து போவாயோ….?! உயிர் போகும்…. நொடியில்.. உன் கரம் பிடித்து… இரைஞ்சுகிறேன்…. காலம் அது… நம் காதல் கவியை பாட காத்துக்கிடக்கிறது… இதழ் திறந்து.. என் காதல் நீ என…. உரக்க உரைத்து.. என் உயிரை… காத்திடுவாயோ…அன்பே?!Read More
உன்னுடன் இருக்கும் தருணம்… விளக்கிச் சொல்ல வார்த்தைகள்.. இல்லை என்னிடம்… காலம் முழுதும் என் நாட்கள்.. உன் கரம் பிடித்தே நகர வேணும் வரம் தருவாயோ அண்ணா…?! HAPPY NATIONAL BROTHERS DAY…Read More
சாளரத்தின் வழியே நிலவை ரசித்துக்கொண்டிருக்கிறேன்… வானம் அனைவருக்கும் ஒன்று எனில் உன் கண்களை சிறுது நேரம் கடன் தா.. வெண்ணிலவே .. அதன் வழியே.. என்னவளை.. ஒருமுறை கண்டுவிட்டு தருகிறேன்…Read More
உலகின் விலை மதிப்பில்லாதவைகளில் ஒன்று.. உந்தன் …கண்ணீர் துளிகள்.. அதை என்னை கேளாமல்..! நீ..செலவு செய்யலாகுமோ .. கண்மணியே..?!Read More
Recent Posts
Recent Comments
Archives
Categories
- Abis paradise
- Cinema
- Tech Tips
- Twitter Trends
- Uncategorised
- ஆன்மிக தகவல்கள் | AANMEEGA THAGAVAL
- இரசகுல்லா
- உலக தலைவர்கள்
- கவிதைகள்
- குலாப் ஜாமுன்
- சுவாரஸ்ய தகவல்கள்
- சௌமி தமிழ்
- தமிழ் பாடல்
- தினம் ஒரு குறள்
- நவக்கிரகக் கோயில்கள்
- பரோட்டா
- பிரியாணி
- பிரைடு ரைஸ்
- புரட்சி
- மீன் குழம்பு
- மேற்கோள்கள்
- வாழ்க்கை வரலாறு
- விளையாட்டு