தலை வாரி பூசூடி
தாவணியில் நான் ஆடி
கொடியிலும் முடியிலுமாக
எத்தனைதான் இருக்கமடி…
உனக்கு எத்தனைதான் தடங்கலடி..
தாடிகளும் கேடிகளும் நிறைந்த நாட்டில்
தேடினாலும் குற்றமடி, ஓடினாலும் கொலைகளடி..
எத்தனைதான் இருக்கமடி
என் பெண்ணே
உனக்கு எத்தனைதான் தடங்கலடி..
தாவணி போட்ட தீபாவளி என்பார்கள்
தாண்ட கூடாது படி என்பார்கள்
அடுபடியே கதி என்பார்கள்
அடிபடு அதுவே உன் விதி என்பார்கள்
பாவை நீயும் பாவமடி
பார்வை அவர்கள் கண்களிலே
எத்தனைதான் இருக்கமடி..!
உனக்கு எத்தனைதான் தடங்கலடி…
எத்தனைதான் இருக்கமடி
உன் விழியில்..!
என் பெண்ணே..!
எத்தனைதான் தடங்கலடி
உன் வழியில்..!
ஆயிரம் நிலவுகள் ஆயினும்
ஆதவனின்றி உயிர் இல்லயே..
ஆயிரம் புரட்சிகள் ஆயினும்
பெண் விழியின்றி வழி இல்லையே..!!
பூவை வைத்த புது குரலே
பூவை எதிர்க்க புறப்படு…!!!
செம்பூவை வைத்த புது குரலே
தாமரை பூவை எதிர்க்க புறப்படு…!!
பெண் விடுதலையே மண் விடுதலை என
உன் வாசல் தாண்டி புறப்படு…!!! புறப்படு..!!
-பிரபாகரன் …